பனை பாடும் பாட்டு – நூல் அறிமுகம்

பனை பாடும் பாட்டு

பனை சோபனம் (பனை பாடும் பாடல்) என்ற நாட்டுப்புறப் பழம்பாடலைத் தழுவியும் விரிவாக்கம் செய்தும் பனையின் 1000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை உள்ளடக்கிப் புனையப்பட்ட பாடல்.

பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?

நான்வளர்ந்த காரணத்தை நாட்டாரே! சொல்லுகிறேன்

பயன்பாடு பல்லாயிரம் பூமியில் அளித்திடப்

படைத்திட்டான் பரமனும் பாங்குடனே இங்கென்னை!

நானளிக்கும் பயன்பாட்டை நலமுடனே சொல்லுகிறேன்!

அறியாவிட்டால் சொல்லுகிறேன் தெரியாவிட்டால் சொல்லுகிறேன்

பாராமுகமா யிருக்காமல்  பட்சமுடன் படித்திடுங்கள்

என்பயனைத் தேசமெங்கும் ஏற்றமுடன் பரப்பிடுவீர்!

Comments are closed.