வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்

ISBN 978-81-923771-2-4
தலைப்பு
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
நூற் பொருள்
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
வெளியீட்டு நாள்
03/07/2016
விலை
ரூ – 300
பக்கங்கள்
264
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

தொல்காப்பியர், திருவள்ளுவர், மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர், சிவ்வாக்கியார், பத்திரகிரியார், கண்ணுடைய வள்ளலார் ஆகியோர்களின் படைப்புகள் சித்தர் இலக்கியங்களின் சித்த மரபு கருத்துக்களை உள்வாங்கி, மக்களுக்கு ஏற்ற பாடல்கள், வசன நூல்கள், உபதேசங்கள், செயல்முறைகளைச் சமுதாயத்திற்கு காட்டிய வள்ளலார் சாதி மதங்களைக் கடந்து பிற உயிர்களின் மேல் இரக்கத்தை வெளிப்படுத்தி ஆன்ம நேய ஒருமைப்பாடு, சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு சுத்த சன்மார்க்கத்துடன் சித்த மரபின் தன்மையை இணைத்து உருவாக்கிய இயக்கக் கோட்பாடுகளான

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற மந்திர நெறி நிற்றல்.

ஆண் – பெண் என்ற பால் வேறுபாடின்றி அனைவருக்கும் ஞானக் கல்வி வழங்குதல்.

ஆன்ம நேய ஒருமைப்பாட்டில் ஈடுபாடு கொள்ளுதல்.

இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக என சமாதி வற்புறுத்தல்.

உயிர்கள் அனைத்தும் கடவுள் இருக்கும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.

உருவ வழிபாட்டை மாற்றி ஒளிவடிவிலே வழிபாடு செய்தல்.

எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.

எவ்வித சமய, மத, ஆச்சாரச் சடங்குகளும் கூடாது.

ஒழுக்கமே கடவுள் வழிபாடு.

கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்ஜோதி.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்றும்

கருணையிலா ஆட்சியை ஒழித்து நலம் நிறைந்த சன்மார்க்கர் ஆட்சிக்கு வழி வகுத்தல்.

கருமாதி, திதி ஆகிய சடங்குகளைச் செய்யாதீர்கள்.

காது, மூக்கு குத்துதல் வேண்டாம்.

கோவில்களில் பலியிடுவதை விலக்குக.

சாதியும், மதமும், சமயமும் பொய். சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைத் தவிர்க்க.

சிறு தெய்வ வாழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கம் என்பது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை தவிர்த்தல்.

தெய்வத்திற்குக் கை, கால் முதலியன இருக்காது.

பசித்தவர்களது பசியைப் போக்குதலே உண்மை விழாவாகக் கொள்க.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ளக்கூடாது.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் இவற்றின் மீது இலட்சியம் வைக்க வேண்டாம்.

எனக் கூறியவைகளைக் கடைப்பிடித்திருந்தால் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளை உள்ளடக்கிய, ஜீவகாருண்யம் இணைந்த, உருவ வழிபாடற்ற சாதி, சமயம், மதங்கள் அற்ற ஒரு புதிய கோட்பாடுகள் அடங்கிய ஒரே இயக்கமாக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்ஜு என்ற திருமூலரின் தாரக மந்திரத்துடன் உலக சமயங்களுக்கு மேலான உலகம் போற்றும் ஒரு சமயம் தோன்றி இருக்கும்.

அவர் காலத்தில், மதங்கள் தங்களுக்குள்ளே போட்டியிட்டுப் போராடத் தொடங்கி ஒருமைப்பாட்டிற்குக் கேடிழைத்துவந்தனர். அதனால், மதங்களை அழித்தாலன்றி, உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றுபடச் சாத்தியமில்லை என்று நம்பினார். இதனால் உலகிலுள்ள எல்லா மதங்களையுமே வெறுத்தார், மனிதர்களை நேசித்தார். அதனால் அம்மதங்களைச் சார்ந்த மக்களிடையே ஒருமைப்பாடு காண விரும்பினார்.

அதற்காக அவர் தன் காலத்தில் இருந்த மதம், சமயங்களைப் பழி தூற்றாமல் யார் மனதையும் புன்படுத்தாமல் தான் உணர்ந்த, தான் தேர்வு செய்த கோட்பாடுகளையும், விளக்கங்களாக மட்டுமே கூறி வந்தது போற்றத்தக்க ஒன்றாகும். மேலும், தான் நடைமுறைப் படுத்திக் காட்டிய கோட்பாடுகளைத் தன்னைப் பின்பற்றுபவர்கள் கடைப் பிடிக்க வில்லையே என்று கோபப்படாமல் மனம் வருந்தி கூறிய வார்த்தை தான் ஸுகடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்ற பிரசித்திப் பெற்ற வாசகம். இதுவே தான் அவரின் பண்பிற்கு முழு எடுத்துக்காட்டாகும்.

ஆங்கிலியேர்களின் மத மாற்றத்தை தடுக்கப் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றிய சைவமதம், வைணவமதம், போன்றவற்றிற்கு மடங்கள் தோன்றிப் பெருகிவந்த காலங்களில் சாதி, சமயம், மதம் கடந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியதால் தான் அந்தக் காலத்தில் கிருத்துவத்தை நுழையவிடக்கூடாது எனச் செயல்பட்ட மடங்கள் வள்ளலாரையும் ஏற்கமறுத்ததை உணரமுடிகிறது.

மற்றவர்கள் சாதி, மத, ஆசாரச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து வந்தபோது அப்படி செயல்படுவதைவிட அவற்றை அழிக்க வேண்டும் என விரும்பினார்.

வேதாந்த, சித்தாந்த, வேத ஆசாரம், மதம், சமயச் சாதி ஆசாரங்கள் பெரிதும் பேசப்பட்டு அவற்றை நடைமுறைபடுத்த பிரச்சாரங்கள் செய்து கொண்டிருந்த காலத்தில் இதிலிருந்து விடுபட்டு, ஜீவகாருண்யக் கோட்பாட்டில் இணைந்த சுத்த சன்மார்க்கச் செயல்களால் இறை அருளைப் பெறுவதும், வழிபாடு என்றால் அது ஒளி  வழிபாடாகத்தான் இருக்க வேண்டுமென்றும் இத்தகைய செயல்களால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம் என்ற இலட்சியத்தை முன்வைத்து உலகில் தனிமைப்படத்தக்க உயர்ந்த செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக ஒரு சமயம் உருவாக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையால் செயல்பட்டது தெளிவாகத் தெரிகின்றது. அவர் வழி நின்று அவர் உருவாக்கிய செயல் வடிவம் தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால் உலகில் தனிமைப் படுத்தப்பட்ட உன்னதமான உலகிற்கு முன்மாதிரியான ஒரு சமுதாயம் உருவாகியிருக்கும்.

அறிமுகம்

திருவருட்பா

வள்ளலார்

வள்ளலார் பார்வையில் ஒழிவில் ஒடுக்கம்

இராமலிங்கர் வள்ளலாராக மாறுவது

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

தாவரத் தகவல் மையம்

என்னுரை

அருட்பாவில் இடம் பெற்றுள்ள தாவரங்களின் பட்டியல்

தாவர விளக்கம்

வள்ளலார் காட்டும் சிவத்தலங்கள்

தாவரங்களின் ஒளிப் படங்கள்

இவைகளை உள்ளடக்கி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.