“குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்”என்ற நூல் கடந்த 10-07-2012 அன்று நெய்வேலியில் நடைப்பெற்ற 15வது புத்தகக் கண்காட்சி தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
“குறிஞ்சிப் பாட்டில்” கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை பாட்டில் தாவரவியல் விளக்கங்கள் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 250-கு மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் ‘இருசொற் பெயரை’ பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்து உள்ளதையும்,2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character)வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததை உணர்த்துகிறது. தாவரங்களின் வண்ண படங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.