தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் – நூல் அறிமுகம்

தலைப்பு
“தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்”
நூற் பொருள்
“தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்”
விலை
ரூ – 400
பக்கங்கள்
320
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

நான் தொகுத்து வழங்கிய தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் என்ற நூல் கடந்த 10-07-2013 அன்று நெய்வேலியில் நடைப்பெற்ற 16வது புத்தகக் கண்காட்சி தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நிலத்திணைகளின் பெயராக, இடம் பெற்ற தாவரங்கள்

(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)

போர் முறை போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் என,

வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உன்னம், பாசி, போந்தை போன்ற தாவரப் பெயர்கள்

மருந்தாக கூறப்படும் பயன்படுத்தும் : வேம்பு, கடு என்ற தாவரங்கள்

சொல்லாக்கத்திற்கு பயன்படுத்திய 26 தாவரங்கள்

அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவரை, இல்லம், உதிமரம், எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞமை, தளா, நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல் போன்ற தாவரங்கள்.

வழிப்பாட்டு முறைக்கு பயன்படுத்திய – காந்தள் தாவரம்.

கூத்து, ஓவிய முறைக்கு பயன்படுத்தியத் தாவரங்கள் : வள்ளி, வள்ளை.

மரபு பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து தாவரங்களின், ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படும் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.